சிறு தொழில் செய்வோர் மின்சார கட்டணத்தை குறைக்க என்ன செய்யலாம்?

கேள்வி: தனியே வாடகை இடத்தில் இங்க் தயாரித்துவருகிறேன். இதற்குஒரு ஹெச்பி மோட்டாரை பயன்படுத்துகிறேன். நான் வாடகை செலுத்தும் தொகையை விட என அதிகளவில் மின்சார கட்டணம் வருகிறது. ஒரு யுனிட்டுக்கு 9ரூபாய் வசூலிக்கிறது மின்சார வாரியம். நான் என்னுடைய மின்சார கட்டணத்தை குறைக்க என்ன செய்யலாம்? – அப்துல் ரஹிம், ஈரோடு.
பதில்: நீங்கள் சிங்கிள் ஸ்பேஸ் மின்சார இணைப்பை பெற்று ஒரு ஹெச்பி மோட்டரை பயன்படுத்துகிறீர்கள். ஆனால், தொழில்நிறுவனத்துக்கான கட்டணத்தை செலுத்தி வருகிறீர்கள். முதலில் நீங்கள் மாவட்ட சிறுதொழில் அலுவலகத்தில் முறையாக பதிவு செய்து நீங்கள் செய்து வருவது சிறுதொழில்தான் என்பதற்கான சான்றிதழ் பெற்று மின்சார வாரியத்திடம் சமர்பிக்கவும். இவ்வாறு சமர்பித்த பின்பு, உங்களுடைய மின்சார கட்டணம் உங்களுக்கு ஒரு யுனிட்டுக்கு 4 ரூபாயாக குறையும். இவ்வாறு சமர்பித்த பின்பு நீங்கள் 2 ஹெச்பி மோட்டார் வரை பயன்படுத்திக் கொள்ளலாம்.

Comments